உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஐ.பி.எல் தொடர் – புதிய விதிகள்.!

45 பார்வைகள்

மழையால் ஐ.பி.எல் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை கையாள வேண்டிய முறைமைகள் தொடர்பான புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி, ஐ.பி.எல் போட்டிகள் தடைப்பட்டால், கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படவுள்ளது.ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 28 முதல் மே 31 வரை நடைபெறவுள்ளது.முதல் போட்டியில் பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையில், வட இந்தியாவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அந்தநாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பல போட்டிகள் மழையால் பாதிக்கப்படக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது.அந்த நேரத்திற்குள் முழு போட்டி நடத்த முடியாவிட்டால், குறைந்தது 5 ஓவர் போட்டி நடத்தி முடிவை தீர்மானிக்க முயற்சி செய்யப்படும்.

அதுவும் சாத்தியமில்லையெனில், சுப்பர் ஓவர் மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்படலாம்.ஆனால், 5 ஓவர்களுக்குக் கூட போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்த ஆட்டம் ரத்து செய்யப்படும்.அப்போது இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.இறுதிப்போட்டிக்கு மட்டும் மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மழையால் போட்டியை நடத்த முடியாவிட்டால், அடுத்த நாள் போட்டி நடைபெறும்.அதிலும் போட்டி முழுவதும் இரத்து செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி செம்பியனாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0