உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 18.03.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
53 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். தேவைக்கு அதிகமாகவே பண வரவு இருக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அக்கறை காட்டுங்கள். குடும்ப நலனில் கொஞ்சம் கவனம் தேவை. கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. மனைவியின் உணர்வுக்கும் மதிப்பு கொடுப்பது சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்போடு செயல்பட வேண்டும். சோம்பேறித்தனம் இல்லாமல் உங்களுடைய கடமைகளை முதலில் முடித்து விடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள். மனதிற்கு பிடித்த பாடலை கேளுங்கள். சோர்வு தானாக விலகும். வேலையில் சுறுசுறுப்பு வந்துவிடும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும் போது தடுமாற்றம் வரும். இதனால் சில பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். கவனமாக செயல்படுங்கள். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் நிதானத்தோடு செயல்பட வேண்டும். நேரம் இல்லாத சூழ்நிலை உண்டாகும். அதற்காக அவசரமாக வேலை செய்தால், ஒரு வேலையை இரண்டு முறை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஆக மொத்தத்தில் இன்று கொஞ்சம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். இறை வழிபாடு செய்யுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பண பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடன் வாங்க கூடிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். முன்கோபம் வேண்டாம். பதட்டம் வேண்டாம். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எல்லா விஷயத்திற்கும் அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டாம். இருப்பதை வைத்து மன நிறைவோடு இருக்க கற்றுக் கொண்டால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். மனது தெளிவாக சிந்திக்கும். உங்களுக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பதை தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள். சுற்றி இருப்பவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுவீர்கள். செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்வீர்கள். மனதில் இருந்த பெரிய பாரம் குறையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் அதிகம் நடக்கும் நாளாக இருக்கும். தீமைகள் உங்களை விட்டு தானாக விலக்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய பிரச்சினையில் தலையிடாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனமாக செயல்பட வேண்டும். புது முடிவுகளை எடுக்கும் போது பல எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். பொய் சொல்லாதீர்கள், அவசரப்படாதீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிம்மதியான நாளாக இருக்கும். மனதில் பூட்டி வைத்திருந்த அன்பு, பாசம், காதலை வெளிப்படுத்துவீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். காதல், திருமணம் வரை செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இன்று சுப நிகழ்ச்சிகளை நடத்த பேச்சு வார்த்தைகளை நடத்தலாம். வேலை வியாபாரம் எல்லாம் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கைநிறைய இலாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சின்ன வியாபாரம் செய்பவர்கள் முதல் பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வரை இன்று பெரிய அளவில் சாதிக்க வாய்ப்புகள் உள்ளது. வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலையில் கவனத்தோடு செயல்படுங்கள். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்யாதீர்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடப்பது நன்மை தரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். குடும்ப சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி வாக்குவாதம் வரும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் மந்தமான போக்கு நிலவும். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தவும். இறைவழிபாடு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பேச்சு திறமையால் நிறைய விஷயங்களை சுலபமாக சாதித்து விடுவீர்கள். ஆனால் எந்த இடத்திலும் பொய் சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டாம். உண்மையை பேசுங்கள். உங்களால் எந்த வேலையை செய்ய முடியுமோ அதற்கு மட்டும் வாக்கு கொடுப்பது நல்லது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0