உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அலி அகா மீது குற்றச்சாட்டு.!

59 பார்வைகள்

டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி அகா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதிகளின் நிலை 1-ஐ மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.பாகிஸ்தான் இன்னிங்ஸின் 39 ஆவது ஓவரில் சல்மான் அலி அகா ஆட்டமிழந்தார்.

அந்த விரக்தியில், அவர் தனது கையுறைகள் மற்றும் தலைக்கவசம் என்பவற்றை மைதானத்தில் முறையற்ற வகையில் தூக்கி எறிந்தார்.இந்த செயல் சர்வதேச போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான ஐசிசி விதி 2.2-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது.

சல்மான் அலி அகா தனது தவறை ஒப்புக்கொண்டு, போட்டி நடுவர் நீயமூர் ரஷீத் ராகுல் விதித்த தண்டனையை ஏற்றுக்கொண்டார்.இதனால் முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.இவரது ஒழுக்கப் பதிவேட்டில் ஒரு டிமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.கடந்த 24 மாதங்களில் இவர் செய்யும் முதல் தவறு இதுவாகும்.

நிலை 1 மீறல்களுக்குக் குறைந்தபட்சம் அதிகாரப்பூர்வக் கண்டனமும், அதிகபட்சமாக போட்டி ஊதியத்தில் 50 சதவீத அபராதமும், ஒன்று அல்லது இரண்டு டிமெரிட் புள்ளிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0