உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்; பஹ்ரைன் – சவுதி மகிழுந்து பந்தயங்கள் ரத்து.!

46 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு அடுத்த மாதம் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபிய கார் பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அசாதாரண பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு ஏப்ரல் 12 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த இந்த இரு பந்தயங்களும் ரத்து செய்யப்படுவதாக சர்வதேச கார் பந்தய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


எமது சமூகம் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பும் நலனும் எப்போதும் முதன்மை என கூட்டமைப்பின் தலைவர் முகமது பின் சுலாயம் தெரிவித்துள்ளார்.இந்த முடிவின் காரணமாக மார்ச் 29 அன்று ஜப்பானில் நடைபெறும் மூன்றாவது சுற்றுக்கும் மே 3 அன்று மியாமியில் நடைபெறும் போட்டிக்கும் இடையில் ஐந்து வார இடைவெளி உருவாகியுள்ளது.

இதனால் இவ்வாண்டுக்காக திட்டமிடப்பட்டிருந்த 24 போட்டிகளில் இரண்டை ரத்து செய்ய வேண்டிய நிலையில் மொத்தப் போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆகக் குறையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.


அதேவேளை, ஆண்டின் பின்னர் காலப்பகுதியில் இந்த போட்டிகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அதே காலப்பகுதியில் நடைபெறவிருந்த பார்முலா 2, பார்முலா 3 மற்றும் எப்-1 அகாடமி போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


இதற்கிடையில் கத்தாரில் நவம்பர் 29 அன்று நடைபெறவுள்ள போட்டியும் அபுதாபியில் டிசம்பர் 6 அன்று நடைபெறவுள்ள போட்டியும் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0