உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வல்லை நெசவாலைக்கு கிடைத்துள்ள வடமாகாண தொழில்முனைவோர் விருது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
47 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை – உடுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை நூற்றல் நெய்தல் ஆலை (வல்லை நெசவாலை) நிறுவனத்துக்கு 10.03.2026 நேற்று செவ்வாய்க்கிழமை வடமாகாண தொழில்முனைவோர் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று 10.03.2026 மாலை யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை நூற்றல் நெய்தல் ஆலையின் உதவி நிதி முகாமையாளரான திருமதி ரூபனா கௌசிகன் விருதினை பெற்றுக் கொண்டார். குறித்த விருது வழங்கும் நிகழ்வில் நிறுவன முகாமையாளரான அமலன் மகேந்திரராஜா அவர்களும் பங்கேற்றிருந்தார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் வரிசையில் தரமான உற்பத்திகளுக்காக இலங்கை நூற்றல் நெய்தல் ஆலைக்கு குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் தொழில் முனைவோர்களின் முயற்சிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்புகளை கௌரவிக்கும் முகமாக வர்த்தகத் தொழிற்துறை மன்றம் யாழ்ப்பாணம் (CCIY) மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை (NEDA) இணைந்து வடமாகாண தொழில் முனைவோர் விருதுகளை வழங்கியுள்ளன.

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு நாற்சந்திக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை நூற்றல் நெய்தல் ஆலையானது 95 வீதமான பெண் பணியாளர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயி@ரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

80 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார்…

53 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அர்ச்சுனா வலியுறுத்தல்

பநாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

71 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில்…

67 0 0