உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ட்ரம்பின் அழுத்தத்திற்குப் பின் 5 ஈரானிய வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்!

42 பார்வைகள்

மனித உரிமை அமைப்புகள், கால்பந்து சங்கங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் கோரிக்கைகளுக்குப் பின்னர், ஈரானிய பெண்கள் கால்பந்து அணியின் ஐந்து உறுப்பினர்களுக்கு அவுஸ்திரேலியா திங்கள்கிழமை (09) அடைக்கலம் வழங்கியது.

ஈரானில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் பெண்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆசிய கிண்ணத்துக்காக ஈரானிய அணி அவுஸ்திரேலியாவில் தற்சமயம் உள்ளது.

மார்ச் 2 அன்று தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டமான அவர்களின் முதல் போட்டிக்கு முன்பு ஈரானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது வீரர்கள் அமைதியாக நின்றதால் ஈரானிய கடும்போக்காளர்களின் கோபத்திற்கு ஆளானார்கள்.

இது ஈரானில் விமர்சனங்களைத் தூண்டியது, ஒரு பழமைவாத வர்ணனையாளர் அந்த அணியை துரோகிகள் என்று குற்றம் சாட்டி கடுமையான தண்டனைக்கு அழுத்தம் கொடுத்தார்.

இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் அச்சத்தை எழுப்பினர்.

இதையடுத்து ட்ரம்பின் அழுத்தத்திற்கு பின்னர், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பின்னர் ஐந்து வீரர்களுக்கும் மனிதாபிமான விசாக்கள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

அவுஸ்திரேலியாவின் மனிதாபிமான விசா திட்டம் அகதிகள் மற்றும் மனிதாபிமானம் தேவைப்படும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பை வழங்குகிறது.விசா வைத்திருப்பவர்கள் நாட்டில் வாழலாம், வேலை செய்யலாம் மற்றும் படிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0