உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கிலன்டில் தோட்டத்தில் மரக்கிளைகள் முறிந்து வீழ்ச்சி: போக்குவரத்து தற்காலிகமாக பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
19 பார்வைகள்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலன்டில் தோட்டத்தின் கோர்த்தி பகுதியில் இன்று (9) மதியம் சுமார் 2.00 மணியளவில் பலத்த காற்று வீசியதனால் பெரிய வாகை மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன.இதன் காரணமாக ஹட்டன் – மஸ்கெலியா பிரதான சாலையில் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைபட்டது. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததினால் தொலைதொடர்பு மற்றும் மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளதுடன், மரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களும் காணப்படுகின்றன. தெய்வாதீனமாக, கிளைகள் விழுந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

மரத்தின் கீழ் பகுதியில் அதிக அளவில் தேயிலைச் செடிகள் காணப்படுகின்றன. காலை வேளையில் அந்தப் பகுதியில் கொழுந்து பறிக்கும் பணி முடிக்கப்பட்டிருந்த நிலையில், மதிய வேளையில் பெண் தொழிலாளர்கள் சுமார் 100 மீட்டர் தொலைவில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


பின்னர் முறிந்து விழுந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஹட்டன் – மஸ்கெலியா பிரதான சாலையில் போக்குவரத்து மீண்டும் வழமையான நிலைக்கு திரும்பியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

56 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0