உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ரியாத் மற்றும் துபாய்க்கான விமான சேவைகள் மீள ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து, பயணிகளின் பாதுகாப்பும் நலனும் முன்னுரிமையாகக் கருதி, ரியாத் மற்றும் துபாய்க்கான தமது அன்றாட வானூர்தி சேவைகளை மீள ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.


இதன்படி இன்று இரவு ரியாத்திற்கான சேவையும், நாளை முதல் துபாய்க்கான சேவையும் மீண்டும் இடம்பெறவுள்ளன.
கொழும்பு – ரியாத் சேவை மாலை 6.15 மணிக்கும், ரியாத் – கொழும்பு சேவை இரவு 10.35 மணிக்கும் இயக்கப்படும்.


அதேபோல் கொழும்பு – துபாய் சேவை நண்பகல் 12.40 மணிக்கும், துபாய் – கொழும்பு சேவை மாலை 5.00 மணிக்கும் இயக்கப்படவுள்ளது.
மேலும், பயணிகள் மேலதிக தகவல்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக அறிந்து கொள்ள, ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

56 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0