உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா.!

73 பார்வைகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 254 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி கடும் சவாலை முன்வைத்தது. எனினும் இறுதியில் இந்திய அணி வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது.


இந்தப் போட்டியில் அக்சர் படேல் எடுத்த இரண்டு முக்கிய கேட்ச்கள் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றின. இங்கிலாந்து அணியின் தலைவர் ஹாரி புரூக் அடித்த பந்தை கவர் திசையில் இருந்த அக்சர் படேல் பின்புறமாக சுமார் 24 மீட்டர் தூரம் ஓடி பாய்ந்து அற்புதமாக பிடித்தார்.மேலும், 14ஆம் ஓவரில் வில் ஜேக்ஸ் அடித்த பந்தை எல்லைக்கோட்டருகே பாய்ந்து பிடித்த அக்சர் படேல் நிலை தடுமாறியதால் பந்தை களத்துக்குள் தூக்கி வீசினார். அதை ஷிவம் துபே கேட்ச் செய்ததால் வில் ஜேக்ஸ் ஆட்டமிழந்தார்.


போட்டிக்குப் பின்னர் கருத்து தெரிவித்த அக்சர் படேல், ஹாரி புரூக்கின் கேட்ச் மிகவும் கடினமானதாக இருந்ததாகவும், ஆனால் ஆட்டத்தின் சூழ்நிலையில் வில் ஜேக்ஸின் விக்கெட்டை பெற்ற அந்த கேட்ச் முக்கியமானதாக அமைந்ததாகவும் கூறினார்.
மேலும், போட்டி எந்த நேரத்திலும் இந்திய அணியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகும் என்ற எண்ணம் தமக்கில்லை என்றும், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இன்னும் ஓவர்கள் மீதமிருந்ததால் நம்பிக்கை இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளன.இந்தப் போட்டிக்கான கள நடுவர்களாக இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் அலெக்ஸ் வார்ஃப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0