உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சிறப்பு விமானம் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி நாடு திரும்ப ஏற்பாடு.!

55 பார்வைகள்

சர்வதேச வான்வெளியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் சிக்கித் தவித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள், நாடு திரும்புவதற்காக சிறப்பு விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, சில பிராந்தியங்களின் வான்வெளி பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, மேற்கிந்தியத் தீவுகள் அணி நான்கு நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருந்தது.


நாடு திரும்ப முடியாத நிலை குறித்து அணியின் பயிற்சியாளர் டேரன் சமி சமூக வலைத்தளங்களில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொல்கத்தாவில் நடைபெற்றசூப்பர் எட்டு போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்ததையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரிலிருந்து வெளியேறியது. அதன் பின்னர் ஏற்பட்ட வான்வெளி சிக்கல்களால் அவர்களின் பயணத் திட்டம் தாமதமானது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0