ஐசிசி டி20 உலகக் கிண்ண இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று.!
ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
மும்பை நகரில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறும்.நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணியுடன், இன்றைய போட்டியின் வெற்றியாளர் இறுதிப் போட்டியில் மோதவுள்ளார்.