உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 05.03.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
98 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்யும் போது கவனம் இருக்கட்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கடன் வாங்காதீர்கள். சிக்கனமாக இருங்கள். தேவையான வேலையை மட்டும் செய்யுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள் நல்லதே நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகளை மேற்கொள்ளும் போது கூடுதல் கவனம் தேவை. நீண்ட தூரப் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வேளையிலும் வியாபாரத்திலும் அவசரம் வேண்டாம். இறைவழிபாடு செய்யுங்கள். தடைகள் விலகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். அதற்காக வேலை வியாபாரம் எல்லாம் நின்று விடாது. அந்தந்த போக்கில் சுமூகமாக செல்லும். பெரிதாக பிரச்சினைகள் இல்லை. வருமானம் உயரும். சேமிப்பு உயரும் பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் அதிகரிக்கும். ஏதோ ஒரு வகையில் இலாபத்தை நீங்கள் பெற போகிறீர்கள். எதிர்கால நலனுக்கு புதிய முதலீடுகளை செய்யலாம். சேமிப்புகளை தொடங்கலாம். நீண்ட தூரப் பயணங்கள் நல்லபடியாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானமாக செயல்பட வேண்டும். அவசரம் கூடாது. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. தெரியாத விஷயங்களில் காலை வைக்காதீர்கள். கொஞ்சம் உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் இருக்கட்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நல்லது நடக்கும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புது தொழில் தொடங்குவதற்கு தேவையான முயற்சிகளை செய்யலாம். அதற்கு நாலு பேருடைய ஆதரவு சுலபமாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அளவில்லா இன்பங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய மனதில் இருந்த கசப்பான விஷயங்கள் எல்லாம் விலகிவிடும். சந்தோஷம் மட்டுமே உங்களுக்கு சொந்தமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தனம் தானியம் இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். மகாலட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்கும். இறைவழிபாட்டில் மன அமைதி கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய புது மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வாய்ப்புகளை கை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களுடைய பேச்சு திறமை வெளிப்படும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு தேவை. எந்த விஷயத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போடவே கூடாது. ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய் என்று சொல்லுவார்கள் அல்லவா. அது இன்று உங்களுக்கு முழுமையாக பொருந்தும். கால தாமதத்தால் பிரச்சினைகள் வரும் நேரத்தை வீணடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சின்னச் சின்ன சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. வேலை வியாபாரத்தில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி வாக்குவாதம் வேண்டாம். நீண்ட தூர பயணங்களை குறைக்கவும். வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று இன்பமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களால் இயன்றவரை அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0