உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இசை நிகழ்ச்சிக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கொழும்பு துறைமுக நகர கடலில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துறைமுக நகரக் கடலில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு துறைமுக பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞன் கடந்த 28 ஆம் திகதி துறைமுக நகர வளாகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இசை நிகழ்ச்சிக்கு வந்தவர் எவ்வாறு கடலில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது தொடர்பில் மர்மம் நீடிக்கிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

39 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

64 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

39 0 0