உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சூப்பர் 8 சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா.!

48 பார்வைகள்

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.196 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 19.2 ஓவர்களில் எட்டியது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் திகழ்ந்தார். அவர் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். அவரது இன்னிங்ஸில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.


ஆட்டத்திற்குப் பின் கருத்துத் தெரிவித்த சஞ்சு சாம்சன், பல ஆண்டுகளாக இந்த வடிவத்தில் விளையாடி வருவதாகவும், விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி உள்ளிட்ட முன்னணி வீரர்களிடம் இருந்து ஆட்ட நுணுக்கங்களை கற்றுக்கொண்டதாகவும் கூறினார். அவர்களின் ஆட்ட அணுகுமுறை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன் தமக்கு பெரும் அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தேசத்துக்காக இதுபோன்ற இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்பது தனது நீண்டநாள் விருப்பம் எனவும், தனது கிரிக்கெட் பயணத்தில் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்திருந்தாலும் இந்த நாள் தமக்கு சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இறைவனுக்கு நன்றி தெரிவித்த அவர், இது தனது வாழ்க்கையின் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0