உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

களுத்துறை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து உரிமையாளரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற இனந்தெரியாத நபர் ஒருவர், வீட்டின் உரிமையாளரால் கதிரை மற்றும் கத்தியால் தாக்கப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த “பெத்தா” எனப்படும் நபர், வீட்டின் உரிமையாளரிடம் வாங்கிய 30,000 ரூபா கடன் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது, அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே திடீரெனத் துப்பாக்கியை எடுத்து வீட்டு உரிமையாளரைச் சுட முயற்சித்துள்ளார்.

அவ்வேளை வீட்டின் உரிமையாளர் அங்கிருந்த கதிரை ஒன்றினால் துப்பாக்கிதாரியைத் தாக்கியதுடன், வீட்டில் இருந்த வாளை எடுத்து அவர் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, உரிமையாளர் தாக்கியதால் காயமடைந்த துப்பாக்கிதாரி, அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

தகவலறிந்து விரைந்த பொலிஸார், காயமடைந்த நிலையில் இருந்த சந்தேக நபரை ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 4 ரவைகளுடன் கைது செய்தனர்.

காயமடைந்த சந்தேக நபர் அலவ்வ, அளுத் வீதியைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டதுடன், அவர் தற்போது நாகொடை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடன் கொடுக்கல் வாங்கல் காரணமாகவே இந்தக் கொலை முயற்சி இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், தப்பியோடிய “பெத்தா” எனும் நபரை கைது செய்யக் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

39 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

64 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

39 0 0