உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மத்திய கிழக்கில் பதற்றம்: விமான சேவைகள் இரத்து.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை மற்றும் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக, இன்று அங்கு இயக்கப்படவிருந்த 12 விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இரத்துச் செய்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய வான்பரப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி இரத்துச் செய்யப்பட்டுள்ள விமானங்களின் விவரங்கள் பின்வருமாறு:-

  • கொழும்பு – டுபாய்: UL 231 / UL 225
  • டுபாய் – கொழும்பு: UL 232 / UL 226
  • கொழும்பு – தோஹா: UL 217
  • தோஹா – கொழும்பு: UL 218
  • கொழும்பு – டம்மாம்: UL 253
  • டம்மாம் – கொழும்பு: UL 254
  • கொழும்பு – ரியாத்: UL 265
  • ரியாத் – கொழும்பு: UL 266
  • கொழும்பு – குவைத்: UL 229
  • குவைத் – கொழும்பு: UL 230

இதேவேளை மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன், மேலதிக தகவல்களுக்கு அந்தந்த பயண முகவர்கள் அல்லது விமான நிறுவனத்தின் இணையத்தளத்தைத் தொடர்புகொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

39 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

64 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

39 0 0