இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்.!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.கடந்த 21ஆம் தேதி கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக நொய்டா மருத்துவர் சுனில் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங், தந்தையின் உடல்நிலை அறிந்து வீட்டிற்கு திரும்பியிருந்தார்.
பின்னர் மீண்டும் அணியுடன் இணைந்த நிலையில், இப்போது தந்தையின் மறைவுச் செய்தி வெளியாகியுள்ளது.கான்சந்த் சிங் எரிவாயு சிலிண்டர் விநியோகப் பணியில் ஈடுபட்டு குடும்பத்தை பராமரித்து வந்தவர் என ரிங்கு சிங்கின் பயிற்சியாளர் மசூத் அமினி தெரிவித்துள்ளார்.
அவரது இறுதிச்சடங்குகள் அலிகாரில் நடைபெறவுள்ளதாகவும், அதில் ரிங்கு சிங் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தையை இழந்து துயரத்தில் இருக்கும் ரிங்கு சிங்கிற்கு கிரிக்கெட் வீரர்களும் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.