உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இலங்கை அணிக்கு எதிரான விமர்சனங்கள் மனநலத்தை பாதிக்கின்றன – தசுன் சானக தெரிவிப்பு.!

49 பார்வைகள்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைச் சுற்றி நிலவும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்களும் சமூக ஊடகத் தாக்குதல்களும் வீரர்களின் மனநலத்தையும், விளையாட்டின் எதிர்காலத்தையும் பாதிப்பதாக அணித் தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார்.


இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியதையடுத்து கருத்துத் தெரிவித்த அவர், தோல்விக்கான பொறுப்பை அணி ஏற்றுக்கொள்கிறது எனவும் குறிப்பிட்டார்.


எனினும், வெளியிலிருந்து வரும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அணி உள்ளகமாக நேர்மறையான மனநிலையுடன் செயல்பட முயற்சித்தாலும், பொதுவெளியில் பரப்பப்படும் கருத்துகளை கட்டுப்படுத்துவது வீரர்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.


உலகக் கிண்ணத் தோல்விக்கான காரணங்களை அணி நிர்வாகம் அறிந்துள்ளதாகவும், குறைகளை திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் அவற்றை விட எதிர்மறை கருத்துகளே அதிகம் பரப்பப்படுவதாகவும் கவலை வெளியிட்டார்.


இளம் வீரர்களின் மனநலத்தைப் பாதுகாக்கவும், இத்தகைய எதிர்மறைச் சூழலைத் தடுக்கவும் அரசாங்கம் உரிய தலையீடு மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அணித் தலைவர் தசுன் சானக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0