உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டி20 உலகக் கோப்பை சூப்பர் எட்டு : மேற்கு இந்தியத் தீவுகள் – தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை.!

60 பார்வைகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இன்று பிற்பகல் 3 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி, தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.


நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை தோல்வியைச் சந்திக்கவில்லை. சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஜிம்பாப்வே அணியை 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. அதேவேளை, தென் ஆப்பிரிக்க அணி நடப்பு சம்பியனான இந்திய அணியை 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.


மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட்ட வரிசை பலமான பவர்-ஹிட்டர்களைக் கொண்டது. தொடக்க ஓவர்களிலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இவர்கள், ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் முடிவை மாற்றக்கூடியவர்கள். எனினும்தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக உள்ளதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடும்.


தென் ஆப்பிரிக்க அணியில் மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி ஆகிய முன்னணி பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கார்பின் போஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோரும் பந்துவீச்சில் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.
துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையிலும், மில்லர் 35 பந்துகளில் 63 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். பிரேவிஸ் 45 ஓட்டங்களும், ஸ்டப்ஸ் 44 ஓட்டங்களும் சேர்த்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ஷிம்ரன் ஹெட்மயர் சிறந்த பார்மில் உள்ளார்.

இத்தொடரில் இதுவரை219 ஓட்டங்கள் சேர்த்துள்ள அவர், இரண்டு அரைச் சதங்களும் அடித்துள்ளார். கேப்டன் ஷாய் ஹோப், ரோவ்மன் பவல், பிரண்டன் கிங், ரோமாரியோ ஷெப்பர்ட், ஷெர்பேன் ரூதர்போர்டு ஆகியோரும் முக்கிய பங்களிப்பு வழங்கக்கூடியவர்கள்.
அகமதாபாத் மைதானத்தில் இத்தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்திருப்பது அந்த அணிக்கு சாதகமாக அமையலாம். பிற்பகல் போட்டி என்பதால் ஆடுகளம் சற்று வறண்ட நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.இந்த ஆட்டத்தின் முடிவு, இந்திய அணியின் அடுத்த கட்ட வாய்ப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0