உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வி.!

46 பார்வைகள்

உலக கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.கடந்த போட்டியில் விளையாடிய கமில் மிஷாரவுக்கு பதிலாக சரித் அசலங்க போட்டியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.

இந்நிலையில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரச்சின் ரவிந்திரா 32 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் அணி இக்கட்டான நிலையில் இருந்த போது ஆடுகளம் புகுந்த அணித் தலைவர் மிட்செல் சென்ட்னர் மற்றும் கோல் மெக்கொன்சி ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி நியூசிலாந்து அணிக்கு வலுசேர்த்தனர்.

மிட்செல் சென்ட்னர் 26 பந்துகளில் 47 ஓட்டங்களையும், கோல் மெக்கொன்சி 23 வந்துகளில் 31 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றுக்கொடுத்தனர்.இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஸன மற்றும், துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், துனித் வெல்லாலகே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் 169 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 31 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இலங்கை அணி இழந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0