உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 25.02.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
63 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தடைகள் தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எல்லா நாளும் நாம் எதிர்பார்த்தது போல, நமக்கு சாதகமாக அமையாது. அப்படி இருக்கும் போது பாதகங்களை, எதிர்கொள்ளும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும். நமக்கு எதிராக இருக்கும் நாளை கூட, நமக்கு சாதகமாக மாற்ற, நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் இறைவழிபாடு மட்டும்தான். இன்று நீங்களும் இறை வழிபாடு செய்யுங்கள் தடை கற்கள், நிச்சயம் படிக்கற்களாக மாறும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எந்த வேலையிலும் தெளிவாக சிந்திப்பீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருக்கப் போறீங்க. இந்த நாள் இனிய நாளாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனதில் சின்ன குழப்பம் இருக்கும். சலனம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க முடியாமல் குழப்பம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சந்தேகங்களை இன்று தவிர்த்துக் கொள்வது நல்லது. நம்பிக்கையாக இருந்தால் மட்டும் ஒரு வேலையை செய்யுங்கள். நம்பிக்கை இல்லாத பட்சத்தில் அந்த வேலையை செய்யாமல் விடுவது ரொம்பவும் நல்லது. குழப்பத்தோடு இன்று நீங்கள் ஒரு காரியத்தையும் கையில் எடுக்கக்கூடாது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். தாமதத்தால் சின்னச் சின்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். குறிப்பிட்ட நேரத்திற்கு செய்ய வேண்டிய வேலையை 1/2 மணி நேரத்திற்கு முன்கூட்டியே செய்து முடித்தால், ரொம்ப ரொம்ப நல்லது. கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று. அதேசமயம் சுறுசுறுப்பு கட்டாயம் தேவை.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சம்பள உயர்வுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். மனநிறைவான இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன பயம் பதட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நாளை கவனமாகத் தான் நடத்திச் செல்ல வேண்டும். புது மனிதர்களை சந்திக்கும் போது கவனம் தேவை. உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை வெளி ஆட்களிடம் அனாவசியமாக பேசுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிம்மதி இருக்கும். தேவையற்ற பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். இரக்க குணம் வெளிப்படும் நாளாகவும் இந்த நாள் இருக்கப் போகிறது. யாரிடமாவது சண்டை போட்டிருந்தால் அவர்கள் மன்னிப்பு கேட்டு சரண் அடையவும் வாய்ப்புகள் இருக்கு. மனபாரம் குறையும் நாள் இன்று. ஈகோவில் இருந்து நீங்கி வெளியே வரக்கூடிய வாய்ப்புகள் அமையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷமான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நேரத்தை வீணடிக்காமல் கைபேசி பார்க்காமல் கடமையில் கண்ணும் கருத்தோடும் நடந்து கொள்வீர்கள். இந்த நாள் இனிய நாளாக அமையும். பிள்ளைகளோடு குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்யவும் வாய்ப்புகள் அமையும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரையில் கொஞ்சம் அலைச்சலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் நீங்கள் மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சினைகள் இல்லை. பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள் இறைவனின் அருளால் நிச்சயம் நல்லது நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கும் நல்ல வழி கிடைக்கும். லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த நாளில் சுப காரிய விஷயங்களை பற்றி பேசுங்கள். நீண்ட நாள் தடையாகவே இருந்த நல்ல காரியங்கள் எல்லாம் இன்று நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையில் திறமையாக செயல்படுவீர்கள். நேர்மை உங்களை காப்பாற்றி விடும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். சில பேருக்கு குடும்ப உறவுகளை தற்காலிகமாக விட்டு, தூரமாக இருக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. மற்றபடி இந்த நாள் எந்த பிரச்சினையும் இல்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0