உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சுப்பர் எட்டு சுற்றில் சிம்பாப்வேக்கு மேல் மேற்கிந்தியத் தீவுகள் 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

47 பார்வைகள்

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்–8 சுற்றில் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.மும்பையில் அமைந்துள்ள வான்கடே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.


இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ஓட்டங்கள் குவித்தது.அந்த அணியின் துடுப்பாட்டத்தில் ஷிம்ரோன் ஹெட்மையர் 85 ஓட்டங்களையும், ரோவ்மன் பவல் 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சிம்பாப்வே அணியின் ரிச்சர்ட் ஙராவா மற்றும் ப்ளெசிங் முசரபானி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


பின்னர் 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 17.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.அந்த அணிக்காக பிராட் எவன்ஸ் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் பெற்றார்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் குடகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்ற 254 ஓட்டங்கள், இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் ஒரு அணி பெற்ற இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0