உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துக.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கும் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையிலேயே மிக விரைவாக நடத்துவதற்குத் தேவையான யோசனைகளை நாடாளுமன்ற விசேட குழுவிடம் சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழுவின் முதலாவது அமர்விலேயே இந்த முன்மொழிவைச் சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் ஒரு சிறிய திருத்தத்தை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதன் மூலம், பழைய தேர்தல் முறையிலேயே தேர்தலை உடனடியாக நடத்த முடியும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால், தேர்தலுக்கான சட்டப் பின்னணியை உருவாக்குவது இலகுவானது என்றும், அதற்கு எதிர்க்கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி முடங்கிக் கிடப்பதால் அத்தியாவசிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் ரஞ்சித் மத்தும பண்டார கவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதில் அரசுக்கு உண்மையான விருப்பம் இருந்தால், காலதாமதமின்றி அதனை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழு, இந்த விவகாரத்துக்கு விரைவான தீர்வை வழங்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

54 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

73 0 0