அரசின் புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு – மின்சார பொறியியலாளர் சங்கம் அதிரடி.!
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய திட்டத்தின் கீழ் ஆறு நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக மாதம் ஒன்றுக்கு 180 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 15 இலட்சம் ரூபா செலவை “அதிகம்” எனக் கூறிய அரசாங்கம், 180 இலட்சம் ரூபா செலவை ஏற்கத் தயாராக இருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மின்சார சபையை இரத்து செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 28ஆம் திகதிஅறிவித்தலை எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிட அமைச்சின் செயலாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தத் திட்டம் தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டால், சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் அனைத்து மின்சார சபை ஊழியர்களும் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கோசல அபேசிங்க எச்சரித்துள்ளார்.