உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இலங்கை அணியின் தோல்வியை கடுமையாக விமர்சித்த சங்கக்கார.!

48 பார்வைகள்

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று (22) இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி 51 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது ‘X’ சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டதாவது:


“இங்கிலாந்துக்கு எதிரான போட்டி இலங்கை அணிக்குப் சிறப்பான ஆட்டமாக அமையவில்லை. பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திட்டங்களைத் துல்லியமாக நிறைவேற்றினர். அவர்களின் செயல்பாடு பாராட்டத்தக்கதாக இருந்தது.ஆனால், துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்ப்புக்கு அமைவாக செயல்படவில்லை.

துடுப்பாட்டத்தில் தேவையான தன்னம்பிக்கையும் தெளிவும் காணப்படவில்லை. போட்டியின் நிலைமையைப் புரிந்து கொண்டு ஆட வேண்டிய தருணங்களில் தவறான அணுகுமுறை வெளிப்பட்டது.குறிப்பாக, கமில் மிஷாரவின் துடுப்பாட்டத்தில் காணப்பட்ட முனைப்பும் உறுதியும் இப்போட்டியில் இல்லாதது தெளிவாகப் பட்டது. மேலும், ஆடுகளத்தின் தன்மையையும் போட்டியின் சூழலையும் சரியாக மதிப்பீடு செய்யத் தவறியதே இந்தத் தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் இந்தத் தோல்வி, தொடரின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு சவாலாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0