உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர் அனுமதியில் சுற்றுநிருபங்கள் மீறல்; மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
51 பார்வைகள்

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி இடைநிலை மாணவர் அனுமதியின் போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களை மீறும் வகையில் மாணவர் அனுமதி இடம்பெற்றமை முதற்கட்ட விசாரணைகளில் அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் மாணவர் அனுமதி தொடர்பாக பெற்றோர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பாடசாலை இடைநிலை மாணவர் ஒருவரின் பாடசாலை அனுமதி தொடர்பில் பெற்றோரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டபோது இடைநிலை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களை மீறும் வகையில் பாடசாலை அதிபர் செயற்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் வலயக்கல்வி அலுவலகத்திடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயி@ரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

82 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார்…

53 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அர்ச்சுனா வலியுறுத்தல்

பநாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

71 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில்…

67 0 0