உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பெருமளவான பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சட்டவிரோத விவசாய இரசாயனப் பொருட்கள் அடங்கிய தொகையுடன் சிலாபம், தொடுவாவ பிரதேசத்தில் வைத்து இரண்டு சந்தேக நபர்களைக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது 25 உறைகளில் அடைக்கப்பட்ட 992 கிலோ 800 கிராம் எடையுள்ள பீடி இலைகள், 1,40,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்கள் என்பவற்றுடன் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு டிங்கிப் படகு என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் (2 கோடி) அதிகம் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற விசேட தகவல் ஒன்றுக்கமைய நேற்று (21) கடற்படையினருடன் இணைந்து ஸ்ரீலங்கா கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் இந்தத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள், விவசாய இரசாயனப் பொருட்கள், டிங்கிப் படகு என்பன மேலதிக விசாரணைகள் மற்றும் முன்வைக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0