உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபை நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
80 பார்வைகள்

பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்படுவதுடன் பெறுமதியான பயிர் வகைகளும் சேதமாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டாக்காலியாக அலைய விடப்படும் மாடுகளை அதன் சொந்தக்காரர்கள் வீடுகளில் அல்லது பண்ணைகளில் கட்டி வைத்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. இது அவர்களுக்கான இறுதி அறிவித்தலாகும் என அலியுறுத்தியுள்ளது.

அத்துடன் கட்டாக்காலியாக பிடிக்கப்படும் மாடுகளுக்கு பிரதேச சபையினால் ஒரு மாட்டுக்கு 10,000 ரூபா தண்டப்பணமும் ஒருநாள் பராமரிப்புச் செலவாக 2,000 ரூபாவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று நாட்களுக்குள் தண்டப்பணத்தைச் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன் தவறும் பட்சத்தில் இம்மாடுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அரச உடமையாக்கி ஏலத்தில் விற்கப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்துள்ளது.

மேலும் இந்நாட்களுக்குள் நோய்வாய்ப்படும் மற்றும் இறக்கும் மாடுகளுக்கு சம்மாந்துறை பிரதேச சபை பொறுப்பேற்காது என்பதுடன் இம்மாடுகளின் சொந்தக்காரர்கள் இருப்பின் அவர்கள் தங்களின் மாடுதான் என்பதனை உறுதிப்படுத்துவதற்காக தங்களின் பகுதி கிராம சேவகரின் உறுதிப்படுத்தலுடன் மாட்டுத் துண்டு (பண்ணைக் காட்) மற்றும் ஆள் அடையாள அட்டை என்பவற்றை ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இது தவிர தவறும் பட்சத்தில் பிரதேச சபையினால் பிடிக்கப்படும் மாடுகள் (கால் நடைகள்) பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிசாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில்…

88 0 0
இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவின் MP பதவியை ரத்துச் செய்யக் கோரும் மனு டிசம்பர் 16ஆம் திகதி விசாரணைக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள…

93 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் என்னை புதைத்து விட்டார்கள் எனக்கு நீதி கிடைக்குமா? – முன்பள்ளி விளையாட்டு விழாவில் கண் கலங்க வைத்த சிறுவன்!

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது. இவ் நிகழ்வின் இறுதியில் வினோத உடை…

86 0 0
இலங்கை செய்திகள்

SLS தரச்சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்கள் பறிமுதல்!

உந்துருளி ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நுகர்வோர் விவகார அதிகார சபை நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சோதனைகளின்போது, SLS 517 தரச்சான்று இல்லாத 327க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள்…

72 0 0