உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

முதியவர் ஒருவர் அடித்துக் கொ*லை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

காலி மாவட்டம், நெலுவ, மில்லவ பிரதேசத்தில் நேற்று நண்பகல் ஏற்பட்ட காணித் தகராறு ஒன்றின் காரணமாக நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மொரவக்க, பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய கடேவத்த வெலிகமகே ஜவன் என்ற முதியவரே உயிரிழந்துள்ளார் என்று காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் இணைந்து பஹல மில்லவ பிரதேசத்தில் தமக்குச் சொந்தமான காணியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மொரவக்க பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தர்க்கம் முற்றிய நிலையில், அந்த நபர் தடியால் தாக்கியதில் முதியவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மொரவக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தப்பியோடியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்காக, காலி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்.சி. புஷ்பகுமாரவின் ஆலோசனைக்கமைய, நெலுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பதிஜீவ தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0