உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மக்கள் செல்வாக்கை சோதிக்க இதுவே வழி; மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

“அரசின் மீதான மக்கள் செல்வாக்கு எந்த நிலையில் உள்ளது என்பதைப் பரிசோதிக்க உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்.” – இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அரசுக்குச் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அநுர அரசு தமக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக இன்னமும் நம்பினால், துணிச்சலுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தேர்தலை அறிவியுங்கள். எதிர்க்கட்சியாகிய நாங்கள் எந்நேரமும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம்.” – என்றார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் அது நிரந்தரமானது என்று எண்ணக் கூடாது என எச்சரித்த அவர், “அதிகாரம் என்பது தற்காலிகமானது என்பதை வரலாறு உணர்த்தும். அதிகாரம் பறிபோகும் போது மக்கள் எங்களை எள்ளிநகையாடினார்கள், ஆனால் இப்போது ஆளும் தரப்பினரை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றார்கள். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்” – என்றும் அவர் அறிவுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0