உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இருபது அடி பள்ளத்தில் பாய்ந்த பாரவூர்தி; இருவர் படுகாயம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை சிங்கள மகா வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து தங்கொட்டுவ நோக்கி அதிவேகமாகப் பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து புரண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

எதிரே வந்த மற்றொரு பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்க முயன்ற போதே, தனது பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்தது என்று விபத்துக்குள்ளான பாரவூர்தியின் சாரதி தெரிவித்துள்ளார்.

பாரவூர்தியின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சாரதியை வட்டவளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் மீட்டுள்ளனர்.

படுகாயமடைந்த சாரதியும் உதவியாளரும் முதலில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாரவூர்தி விபத்துக்குள்ளான இடத்தில் மற்றுமொரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று இவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதில் பயணித்த பயணி ஒருவர், பாரவூர்தி விபத்தை வேடிக்கை பார்ப்பதற்காக கீழே இறங்கியுள்ளார். பின்னர் மீண்டும் பேருந்தில் ஏற முயன்றபோது, பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி அவரது கால் நசுங்கியுள்ளது. படுகாயமடைந்த அவரும் சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன கமகே தலைமையிலான போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் இவ்விரு விபத்துக்கள் குறித்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0