உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புதிய அரசமைப்பை பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை ஆரம்பத்திலிருந்தோ அல்லது பூஜ்ஜியத்திலிருந்தோ தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட வரைவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணிகளைத் தொடர முடியும் என்றும் ஊடகங்களிடம் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நீதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக, புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்,
“புதிய அரசமைப்புக்காக நாம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பணிகளைத் தொடங்க வேண்டியதில்லை. கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் தயாரிக்கப்பட்ட பல வரைவுகள் மற்றும் ஆவணங்கள் ஏற்கனவே கைவசம் உள்ளன. அவற்றைப் பரிசீலித்து, சிறந்த அம்சங்களை உள்வாங்கி இந்தப் பணிகளைத் தொடர முடியும்.” – என்றார்.

அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவும் (பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்றவை) கூட முற்றிலும் புதிதாக உருவாக்கப்படாமல், முன்னைய வரைவுகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டது என்பதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

கடந்த கால வரைவுகளை அடிப்படையாகக் கொண்டு பணிகள் முன்னெடுக்கப்படும் என்று கூறிய போதிலும், அரசமைப்பு உருவாக்கப் பணிகளை நிறைவு செய்வதற்கான துல்லியமான காலவரையறை குறித்து இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0