உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். வர்த்தகர் உட்பட மூவர் போதைப்பொருளுடன் கைது.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
95 பார்வைகள்

இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பயணி யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் அடிக்கடி வான்பயணங்களை மேற்கொள்ளும் ஒரு வர்த்தகர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த பயணியின் பயணப் பையின் ரகசியப் பகுதியில் இரண்டு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 116 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சந்தைப் பெறுமதி 2 கோடியே 11 இலட்சத்து 60 ஆயிரம் (ரூபா 21,160,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றி வருபவராவார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயி@ரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

86 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார்…

55 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அர்ச்சுனா வலியுறுத்தல்

பநாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

73 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில்…

69 0 0