உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வீதி ஓட்ட நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
57 பார்வைகள்

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வானது இன்றையதினம் இடம்பெற்றது.

ஆண்களுக்கான வீதி ஓட்ட நிகழ்வானது வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி மாவடி சந்தி, மூளாய் சந்தி, சுழிபுரம் சந்தி, சித்தங்கேணி சந்தி ஊடாக மீண்டும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியை வந்தடைந்தது.

அதேபோல பெண்களுக்கான வீதியோட்ட நிகழ்வானது சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி சித்தங்கேணி சந்தி ஊடாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியை வந்தடைந்தது.

அந்தவகையில் ஆண்கள் அணியில் முதலியார் குமாரசுவாமி இல்லத்தை சேர்ந்த ஈ.தர்சிகன் முதலாம் இடத்தையும், பெண்கள் அணியில் சபாரட்ணசிங்கி இல்லத்தை சேர்ந்த கே.கேசவி முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வெற்றியீட்டிய வீர – வீராங்கனைகளுக்கான மற்றும் போட்டியை முழுமையாக நிறைவு செய்த மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

கல்லூரியின் முதல்வர் சி.தனஞ்சயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். உடற்கல்வி ஆசிரியர் சங்க தலைவர் ப.தர்மகுமாரன் கலந்து சிறப்பித்ததுடன் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயி@ரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

86 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார்…

55 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அர்ச்சுனா வலியுறுத்தல்

பநாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

73 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில்…

69 0 0