உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நியூசிலாந்துக்கு முதல் வெற்றி.!

61 பார்வைகள்

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது. ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றியீட்டி ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில் நியூசிலாந்து அணியின் முதல் வெற்றியாக இது இருந்தது.

விசாகாப்பட்டினத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணிக்கு டெவோன் கொன்வோய் (44) மற்றும் டிம் செய்பர்ட் (62) ஆரம்ப விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றது.பதிலெடுத்தாட வந்த இந்திய அணிக்கு மத்திய வரிசையில் சிவம் டுபே 23 பந்துகளில் 65 ஓட்டங்களை விளாசியபோதும் வேறு எவரும் கைகொடுக்கவில்லை.

இதனால் அந்த அணி 18.4 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (31) திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

33 0 0