உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

47 பார்வைகள்

இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணித் தலைவர் ஹாரி புரூக் மற்றும் அனுபவமிக்க வீரர் ஜோ ரூட் ஆகியோர் ஆட்டமிழக்காத சதங்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.இந்த வெற்றியின் மூலம், இலங்கை மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.அதன்படி, இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 357 ஓட்டங்களை குவித்தது.


இளம் வீரர் ஜேக்கப் பெத்தல் 72 பந்துகளில் 8 நான்குகள் அடித்து 65 ஓட்டங்களை பெற்றார்.
அணித் தலைவர் ஹாரி புரூக் 66 பந்துகளில் 11 நான்குகள் மற்றும் 9 ஆறுகள் உட்பட ஆட்டமிழக்காமல் 136 ஓட்டங்களை எடுத்தார்.இதன் மூலம், 2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் பெற்ற 128 ஓட்டங்களை முந்தி, இலங்கை மண்ணில் ஆசியரல்லாத வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஓட்டச் சாதனையை புரூக் படைத்தார்.


ஜோ ரூட் 108 பந்துகளில் 9 நான்குகள் மற்றும் ஒரு ஆறு அடித்து ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை சேர்த்தார்.இந்த சதத்துடன், ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாராவின் சாதனையையும் அவர் முறியடித்தார்.

35 வயதான ஜோ ரூட் இதுவரை 384 போட்டிகளில் 506 இன்னிங்ஸ்களில் விளையாடி, 49.69 என்ற சராசரியுடன் மொத்தமாக 22,413 ஓட்டங்களை குவித்துள்ளார். அவர் 61 சதங்களும் 116 அரைசதங்களும் அடித்துள்ளார்.இங்கிலாந்து அணி 350 ஓட்டங்களை கடந்த போது, நான்காவது விக்கெட்டுக்காக ரூட் – புரூக் ஜோடி 113 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 191 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது.
இலங்கை தரப்பில் பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா (1/45), வனிந்து ஹசரங்க (1/76), ஜெப்ரி வான்டர்சே (1/76) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

358 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் பத்தும் நிஸ்ஸங்க 25 பந்துகளில் 5 நான்குகள் மற்றும் 3 ஆறுகள் அடித்து 50 ஓட்டங்களை பெற்றார்.
கமில் மிஷாரா (22), விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் (20), ஜனித் லியனகே (22), துனித் வெல்லலகே (22) ஆகியோர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.


இதனிடையே, தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்த பவன் ரத்நாயக்க 115 பந்துகளில் 12 நான்குகள் மற்றும் ஒரு ஆறு உட்பட 121 ஓட்டங்களை பெற்றார்.இறுதியில், இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இங்கிலாந்து அணிக்காக ஜேமி ஓவர்டன் (2/48), சாம் கரன் (1/44), லியம் டாசன் (2/48), வில் ஜாக்ஸ் (2/43) மற்றும் அடில் ரஷித் (2/61) ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஹாரி புரூக் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் சிறந்த வீரராக ஜோ ரூட் தெரிவுசெய்யப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

33 0 0