உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அபிஷேக்கின் அதிரடியால் இந்தியா தொடர் வெற்றி.!

48 பார்வைகள்

அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் 8 விக்கெட்டுகளால் வெற்றியிட்டிய இந்திய அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரை 3–0 என கைப்பற்றியது.

இந்திய அணி 2024 தொடக்கம் பெறும் 11 ஆவது தொடர்ச்சியான டி20 தொடர் வெற்றியாக இது அமைந்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக டி20 தொடர் வெற்றிகளை பெற்ற அணிகள் வரிசையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் முதல் இடத்தை பகிர்ந்துகொண்டது. பாக். அணி 2016- – 18 காலப்பகுதியில் தொடர்ச்சியாக 11 தொடர் வெற்றிகளைப் பெற்றது.

கௌஹாத்தியில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் பதிலெடுத்தாடிய இந்திய அணிக்கு ஆரம்ப வீரர் அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைச்சதம் விளாசி இந்திய அணிக்காக அதிவேக அரைச்சதம் பெற்ற வீரர்களில் யுவராஜ் சிங்கிற்கு (12 பந்துகள்) அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

வெற்றிவரை ஆட்டமிழக்காது இருந்து ஷர்மா 20 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 68 ஓட்டங்களை விளாசினார். அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன்மூலம் இந்திய அணி 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை (28) விசாகபட்னத்தில் நடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

33 0 0