உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாளை ஜனநாயகன் திரைப்பட வெளியீடு ஒத்திவைப்பு.!

சினிமா 9 மாதங்கள் முன்
49 பார்வைகள்

நாளை (ஜன.,9) வெளியாக இருந்த ஜனநாயகன் படம், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை (ஜன.,9) ரிலீஸ் ஆவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால், பட வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில், விசாரணையின் முடிவில், நாளை(9ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

@subtitle@ஒத்திவைப்பு@@subtitle@@
இந்நிலையில், இந்தப் படத்தை தயாரித்த நிறுவனம், தவிர்க்க முடியாத காரணங்களினால் படத்தை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

@subtitle@கனத்த இதயத்துடன்..@@subtitle@@athavan இதுகுறித்து வெளியான அறிக்கை: கனத்த இதயத்துடன் இந்த அப்டேட்டை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ள சூழல் காரணமாக, ஜனநாயகன் படம் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்கிறோம். இந்த முடிவை எடுப்பது எளிதல்ல. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களின் பேராதரவே எங்கள் மிகப்பெரிய பலம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0