உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மீண்டும் திரைப்படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி.!

சினிமா 8 மாதங்கள் முன்
20 பார்வைகள்

இயக்குனர் பாக்யராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கூடுதலாக சினிமாவில் 50 ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடி வருகிறார். அதை வெட்டி அவர் அளித்த பேட்டியில், ”சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். இப்பொழுது மீண்டும் படம் மற்றும் வெப் சீரியஸ் இயக்க உள்ளேன்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ”சினிமாவுக்கு வர நண்பர்கள் உதவினார்கள். அப்புறம் பாரதிராஜாவிடம் சேர்ந்தேன். ’16 வயதினிலே’ படத்தில் என் பெயர் வந்தது. அந்த படத்தின் வெற்றி பலருக்கு மாற்றத்தை கொண்டு வந்தது. அதில் நானும் ஒருவன்.

சமீபத்தில் கமலிடம் பேசியபோது கூட இதை குறிப்பிட்டார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்தேன். பின்னர் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆனேன். அடுத்து ஹீரோ, இயக்குனர் ஆனேன்.கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தற்செயலாக ஒரு கேரக்டரில், அதுவும் சின்ன ரோலில் நடித்தேன். அதை பார்த்த என் அம்மா நீ ஏன் ஹீரோ ஆகக்கூடாதுனு கேட்டார்.

அதுக்கு தனி திறமை வேணும்னு சொன்னேன். நீ ஹீரோ ஆவாய். உன் இயக்குனர் நடிக்க வைப்பார் என்றார். அவர் சொன்னது ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நடந்தது. நான் உதவி இயக்குனராக இருந்தபோது எனக்கு பின், என் பெயரை காப்பாற்றும் வகையில் பாக்யராஜ் வருவார் என, இயக்குனர் பாரதிராஜா சொன்னார்,” என்று மலரும் நினைவுகளை பாக்யராஜ் சொன்னார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0