உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

சினிமா 9 மாதங்கள் முன்
61 பார்வைகள்

நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.மாருதி இயக்கியுள்ள இப்படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார்.

திகில், நகைச்சுவை, ஆக்‌ஷன் என மாஸ் மசாலா வகை படமான இது, தெலுங்கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது.இதில் சஞ்சய் தத், பொமன் இரானி, மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்பட பலர் நடிக்கின்றனர்.கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த புதிய ட்ரெய்லரின் ரன் டைம் 3.12 நிமிடங்கள். இதில் பார்வையாளர்களுக்கு காட்சி அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் படக்குழு செயல்பட்டுள்ளது.இதில் பிரபாஸ் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர்தான் முக்கிய கதாபாத்திரங்களாக உள்ளனர்.ஹாரர், காமெடி, டிராமா, ஆக்‌ஷன் என மாஸ் மாடலாக படத்துக்கான அத்தனை அம்சங்களும் இதில் உள்ளது.

மாய வீட்டுக்குள் செல்லும் பிரபாஸ் மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பித்தார்களா என்பது மாதிரியான காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது.இந்த ட்ரெய்லரின் கடைசி ஷாட்டில் பேய் போல வேடமணிந்துள்ளார் பிரபாஸ்.

இது ஹாலிவுட் படமான ஜோக்கர் பாத்திரத்தை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது.இது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

65 0 0