உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசிபலன்கள் – 27/12/2023, கன்னி ரசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

ராசி பலன்கள் 3 ஆண்டுகள் முன்
43 பார்வைகள்

27-12-2023, மார்கழி 11, புதன்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பிரதமை திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.28 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். ஆருத்ரா தரிசனம். சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசி பலன்கள் – 27.12.2023

மேஷம்

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகளால் சிறு சிறு மனகஷ்டங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்தன் மூலம் ஒருசில உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல் உண்டாகும். எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில தடங்கல்கள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்

இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். கடன் பிரச்சினை ஓரளவு தீரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். வெளியே பயணம் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.

தனுசு

இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.

மகரம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கடன்கள் சற்று குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை குறைக்கலாம். பணவரவு சுமாராக இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 01.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். காரிய தடை விலகும். எப்போதுமே உங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள், உங்களுக்கு ஆதரவு…

91 0 0