கார்த்திகை 27 – நினைவுகளில் என்றும் வாழும் மாவீரர்களுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி!
எமது மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களையும், போரின் கோரத்தால் உயிர்நீத்த எமது உறவுகளையும் நினைவுகூரும் புனிதமான கார்த்திகை 27 நினைவேந்தல் நாளில், இன்று (27.11.2026) பாராளுமன்றத்தில் அவர்களுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் அவர்களுடன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களும் இணைந்து கொண்டு, உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
உயிர்கள் மண்ணில் புதைந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகளும், தியாகங்களும் எமது இனத்தின் வரலாற்றிலிருந்து ஒருபோதும் மறைந்துவிடாது.
ஒவ்வொரு கார்த்திகை 27ஆம் நாளும் வெறுமனே ஒரு நினைவேந்தல் நாளல்ல; இழந்த உயிர்களை நினைத்து இதயங்கள் கனக்கும் நாள். பிரிந்த உறவுகளின் நினைவுகளால் கண்கள் கசியும் நாள். தியாகங்களின் வலியையும், இழப்புகளின் ஆழத்தையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் நாள்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், எத்தனை தலைமுறைகள் மாறினாலும், எமது உறவுகளின் நினைவுகள் எம் நெஞ்சங்களில் அணையாத தீபங்களாக என்றும் ஒளிரும்.
விதைக்கப்பட்ட உயிர்கள் மண்ணில் உறங்கலாம்; அவர்கள் விதைத்த நினைவுகள் எம் இதயங்களில் என்றும் வாழும்!
மாவீரர்களுக்கும், உயிர்நீத்த எமது உறவுகள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான வீர வணக்கங்களும் அஞ்சலிகளும்.





