உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மஞ்சள் நிற உடையில் சஜித்; சபையில் சபாநாயகர் பாராட்டு

இலங்கை செய்திகள் 34 வினாடிகள் முன்
1 பார்வைகள்

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாள்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஆடைத் தெரிவை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பாராட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இப்பிரசாரம் 16 நாள்களுக்கு முன்னெடுக்கப்பட்டாலும், பெண்கள் மற்றும் சிறுமிகளை வன்முறைகளிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வெளியிட்ட கருத்துகளையும் அவர் பாராட்டினார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் பெரும்பாலும் நெருக்கமான தனிப்பட்ட உறவுகளுக்குள்ளேயே இடம்பெறுகின்றன என்ற பிரதமரின் கருத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே தான் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து சபைக்கு வந்தார் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதன்போது, நேரக் கட்டுப்பாடு காரணமாக உரையை நிறைவுசெய்யுமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த சஜித் பிரேமதாஸ, இடையூறுகளுக்கு மத்தியிலும் உரையாற்றுவதற்கு வாய்ப்பளித்தமைக்காகச் சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, நகைச்சுவை கலந்த தொனியில், “இன்று அழகாக ஆடை அணிந்து வந்திருக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுவிட்டு, பிரதமர் ஹரிணி அமரசூரியவைப் பதிலளிக்குமாறு அழைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

92 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

57 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

78 0 0
இலங்கை செய்திகள்

ஆட்டுப்பண்ணைக்கு தீ வைப்பு; ஆடுகள் உ**யிரிழப்பு.!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், பண்ணை முற்றாக…

121 0 0