ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!
கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்று, சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புன்னாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற குறித்த பாரவூர்தி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்.
அவர் சிகிச்சைக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் கினிகத்தேன பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.



