ஆட்டுப்பண்ணைக்கு தீ வைப்பு; ஆடுகள் உ**யிரிழப்பு.!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், பண்ணை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் இரண்டு ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளது.
அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த ஆட்டுப்பண்ணையின் உரிமையாளர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆடுகளை வளர்த்து வருவதாகக் குறிப்பிட்டனர்.
இவ்வாறு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பண்ணை உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினரும் வருகை தந்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





