உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“தலைமறைவாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மீண்டும் மக்கள் மத்தியில் வந்து தலைதூக்க முற்படுகின்றனர். அரச வளங்களைச் சுரண்டிய இந்த அரசியல்வாதிகளுக்குச் சில அரச ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்கினர். இதனால் இறுதியில் நாடு நாசமடைந்தது. வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டதுடன் மக்களும் துன்பப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசு ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிரான சக்தியாக உள்ளது. நாட்டை நாசமாக்கிய ஊழல்வாதிகள் குடும்பத்துடன் சிறைச்சாலைக்குச் செல்கின்றனர். இது கட்டாயம் நடைபெற வேண்டிய விடயம்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் ஊழல்வாதிகள் சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்கள். கடந்த காலங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்பட்டனர். தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது.

எனவே, இந்த அரசு ஐந்து ஆண்டுகள் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனது முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும். ஊழல்வாதிகளின் கைகளுக்கு ஆட்சி மீண்டும் செல்லக் கூடாது.

இந்த அரசு தேவையில்லை என்றால், இதைவிடச் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஊழல் அற்ற தரப்பினரே ஆட்சிக்கு வர வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

91 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

57 0 0
இலங்கை செய்திகள்

ஆட்டுப்பண்ணைக்கு தீ வைப்பு; ஆடுகள் உ**யிரிழப்பு.!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், பண்ணை முற்றாக…

120 0 0
இலங்கை செய்திகள்

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்பாடு ஆரம்பம்.!

மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தினால் ’16 நாட்கள் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயற்பாடு’ (16 Days of Activism) எனும் விழிப்புணர்வு நிகழ்வு மன்னார்…

109 0 0