உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வல்வெட்டித்துறையில் நாளை தேசியத் தலைவரின் பிறந்த தின நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
85 பார்வைகள்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினம் நாளை வியாழக்கிழமை யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கும் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றாலும், பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள வல்வெட்டித்துறை, ஆலடி வீதியிலுள்ள காணியில், வருடந்தோறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தலைமையில் பிரதான நிகழ்வு இடம்பெறுவது வழமையாகும்.

இம்முறை பிரபாகரனின் 72ஆவது பிறந்த தினத்துக்கு முன்னதாகவே, சிவாஜிலிங்கம் சுகயீனம் காரணமாக அண்மையில் காலமாகிவிட்டார். இருப்பினும், அவரது வழியொற்றி அதே இடத்தில் பிறந்த தின நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை காலை 10.00 மணிக்கு வழமை போன்று பிறந்த தின நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இதன்போது பிறந்த தின கேக் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்குச் சிற்றுண்டிகள் மற்றும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் வல்வெட்டித்துறை மக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மஞ்சள் நிற உடையில் சஜித்; சபையில் சபாநாயகர் பாராட்டு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாள்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து…

25 0 0
இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

95 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

59 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

78 0 0