யாழில் வீடு புகுந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்; ஆறு பேர் அதிரடியாக கைது.!
யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முடக்காடு பகுதியில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய ஆறு பேர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த குறித்த கும்பல், வீட்டிலிருந்த மகன், மகள் மற்றும் பெற்றோர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (24) நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


