உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்திய மீனவர்களால் வாழ்வை இழந்த வடராட்சி கிழக்கு மீனவர் – பெறுமதிமிக்க வலைகள் நாசம்!

இலங்கை செய்திகள் 20 நிமிடங்கள் முன்
81 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இந்திய இழுவை மடி படகுகள் அட்டகாசம் புரிந்து கொடுக்குளாய்-ஆழியவளை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரின் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை அறுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(23) சுண்டிக்குளம்-சாலை கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளன

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் அண்மைக்காலமாக இந்திய இழுவைமடி படகுகளின் வரத்து அதிகரித்துள்ளது.

சீரற்ற காலநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அண்மை நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதியிலும் இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்துள்ளது.தற்போது கடற் பகுதி சீராக காணப்படுவதால் எமது பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக தற்போது அதிகளவானோர் கடலுக்குச் செல்கிறார்கள்.

எமது மீனவர்களின் வலைகளை இந்திய இழுவை மடி படகுகள் அறுத்துச் செல்வதால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(23) மேலும் ஒரு மீனவரின் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதிகளவான கடற்படை டோரா படகுகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் தற்போது அந்த நடவடிக்கை குறைந்துள்ளது இதனால் எமது கடல் பகுதிக்குள் நுழைந்து இந்திய இழுவை மடிப் படகுகள் எமது வளத்தை அழித்துச் செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது.

இரண்டு நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்களின் வலைகள் இந்திய இழுவைமடி படகுகளால் நாசமாக்கப்பட்டுள்ளது தற்போதைய கடல் நிலைமை தொடர்பில் கடல் தொழில் அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமக்கான நஷ்ட ஈட்டை பெற்றுத்தர வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி மற்றும் கடற்தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பாதிப்படைந்த மீனவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

81 0 0
இலங்கை செய்திகள்

பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து

பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

101 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

102 0 0
இலங்கை செய்திகள்

சிங்கராஜ வனப்பகுதியில் உயிரியல் வளக் கொள்ளை – 4 சீனப் பிரஜைகளுக்கு 7.64 கோடி ரூபாய் அபராதம்!

சிங்கராஜ வனப்பகுதியின் இடையக வலயத்தில் உயிரியல் வளக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளுக்கு மொத்தம் 7 கோடியே 64 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

108 0 0