உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இஸ்ரேலில் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவு

உலக செய்திகள் 11 நிமிடங்கள் முன்
113 பார்வைகள்

இஸ்ரேலின் காபந்துப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசியல் போட்டியாளரான காடி ஐசன்கோட் ஆகியோரின் கட்சிகளுக்கு இடையிலான புதிய சுற்றுக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், எவ்வித இணக்கப்பாடுமின்றி நேற்று (22) நிறைவடைந்துள்ளன.

டெல் அவிவ் நகருக்கு அருகிலுள்ள ஹெர்ஸ்லியா (Herzliya) விடுதியொன்றில், ஐசன்கோட்டின் ‘யஷார்’ (Yashar) கட்சி மற்றும் நெதன்யாகுவின் ‘லிக்குட்’ (Likud) கட்சிப் பிரதிநிதிகளுக்கு இடையே சுமார் நான்கு மணித்தியாலங்கள் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினரும் முக்கிய கொள்கை ரீதியான விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்ததாகவும், அடுத்தகட்டச் சந்திப்பு விரைவில் நடைபெறும் எனவும் இரு கட்சிகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அடுத்த சந்திப்புக்கான திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டிற்கு எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியைச் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ளும் வகையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நெதன்யாகு வலியுறுத்தி வருகின்றார்.

இதன் மூலம் தன்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பைப் பெற முடியும் என அவர் எதிர்பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும், நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஐசன்கோட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதோடு, அவரது கூட்டணிக் கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட்டும் எவ்வித சூழ்நிலையிலும் நெதன்யாகுவுடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இணைவதற்கு அரபுக் கட்சிகளைத் தவிர்க்க வேண்டும், பலஸ்தீன அரசை உருவாக்குவதை நிராகரிக்க வேண்டும் மற்றும் சிரியா, லெபனான், காசா பகுதிகளின் மீதான இஸ்ரேலியக் கட்டுப்பாட்டைத் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளை நெதன்யாகுவின் லிக்குட் கட்சி முன்வைத்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் இழுபறிப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என எச்சரித்துள்ள ஐசன்கோட், பாராளுமன்றத்தில் ‘அவசரகால தேசிய அரசாங்கம்’ ஒன்றை முன்மொழியத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இந்தோனேசியாவில் தீவிபத்திற்கு உள்ளான தொழிற்சாலையில் இருந்து 24 சட@லங்கள் மீட்பு!

ஜாவாவில் தீ விபத்தால் அழிந்த ஒரு தொழிற்சாலையில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை (22) இந்தோனேசிய காவல்துறை 24 சடலங்களை அகற்றியது.  ஒரு நாள் முன்னதாக, கட்டிடம் முழுவதும் தீ…

134 0 0
உலக செய்திகள்

உடன்பாட்டை எட்டத் தவறினால் புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறினால், புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை நடத்தத் தாம் நாட்டம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

126 0 0
உலக செய்திகள்

உக்ரைனில் இடிபாடுகளுக்குள் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயதுச் சிறுவன் உயிருடன் மீட்பு!

உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு அருகிலுள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் இடிபாடுகளுக்குள் சுமார் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கீவ் பிராந்தியத்தின்…

128 0 0
உலக செய்திகள்

இந்தோனேசியாவுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள தீவுகளில் ஒன்றான பெண்டா தீவில் இன்று (21) பிற்பகல் 3.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளதாக…

152 0 0